Friday, October 22, 2010

NEW MEDIA துரித உலகில் புதிய ஊடகம்.




"அந்த நிகழ்வைப் படம்பிடித்து பேஸ்புக், ருவிற்றர் ஆகிய சமூக தளங்களில் பகிர்ந்துகொள்கிறேன்
. "

நான் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறேன். நான் பயணிக்கும் பேரூந்து மாங்குளத்தைக் கடந்துசெல்கிறது. அப்போது வீதியில் குறுக்கே சில யானைகள் வருகின்றன. எல்லோரும் ஏதோவெல்லாம் பேசிக்கொண்டிருக்க, பாரிய ஒலிகளை எழுப்பி யானைகளை காட்டுக்குள் விரட்டும் வேலைகளில் சாரதியும், நடத்துனரும் இன்னும் சிலரும் ஈடுபடுகிறார்கள். அப்போது என்னுடைய அலைபேசியிலுள்ள கமராவின் மூலம் அந்த நிகழ்வைப் படம்பிடித்து பேஸ்புக், ருவிற்றர் ஆகிய சமூக தளங்களில் பகிர்ந்துகொள்கிறேன்.

இதுபோல, இலங்கையில் அவசரகால நிலைகளின் போது அந்த தகவல் பரிமாற்றம் அச்சு மற்றும் இலத்திரணியல் ஊடகங்களைத் தாண்டியும் வேகமாக நடைபெற்றது.இலங்கை மக்களுக்கு குறிப்பாக வடக்குகிழக்கு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிமக்களுக்கு இந்த வகையான ஊடகங்களின் பரிச்சயம் மிகையாக உண்டு. இந்த இரண்டு தகவல் பரிமாற்ற வழிமுறைகளும் புதிய ஊடகச்சுழலின் வளர்ச்சியே.


"தொலைபேசி ஒரு ஊடகமாக முடியும் என்றால் அவற்றின் தனித்தனி வசதிகளும் ஊடகமாக கொள்ளப்பட முடியும்"


ஊடகங்களின் தன்மையை அவற்றில் நேரடியாக பங்களிப்பவர்களின் எண்ணிக்கையை எடுத்துக்கொண்டு வகைப்படுத்தினால் எஸ்எம்எஸஸை எந்தவகையான ஊடகமாக எடுத்துக்கொள்ளமுடியும் என்றால் “மைக்குறோ ஊடகமாக எடுத்துக்கொள்ளலாம்”.ஒரு எஸ்-எம்-எஸ் பத்துப்பேருக்கு அனுப்பப்படும்பொழுது அதன் தன்மைக்கேற்ப அது இன்னுமொரு நூறுபேருக்கு போர்வேர்ட் செய்யப்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

ஊடகங்களின் தேவை இற்றைக்கு பலநூறாண்டுகளுக்கு முன்னர் உணரப்பட்டது.இன்று ஊடகம் தெளிவான வகைப்படுத்தப்பட்ட தன்மைகொண்டதாக குறித்த பார்வையாளர்கள் வாசகர்கள் நேயர்களுக்கு கிடைக்ககூடியதாக வேண்டியிருக்கிறது.
நாங்கள் நின்று நிதானித்துச் செயற்படுவதற்கு முன்னர் உலகில் பல்லாயிரம் நிகழ்வுகள் நடந்து விடுகின்றன. இந்த நிகழ்வுகள் ஏதோவொரு வடிவில் எங்களையும் ஆட்கொள்கிறது. அல்லது பிணைக்கின்றது. எனவே, உலகின் ஒவ்வொரு நிகழ்வுகள் எம்முடன் சம்பந்தப்பட்டவையே. அவற்றில் குறிப்பிட்டளவான நிகழ்வுகளின் மாற்றங்களை அதாவது புதிய தகவல்களை அறிந்துகொள்ளவேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது.


புதிய நிகழ்வு மாற்றங்களே செய்திகள். News என்பதன் அடிப்படை அர்த்தம் அதுவே. எங்கும் புதிதாக இருப்பவை செய்திகள் ஆகின்றன. அந்தந் செய்திகளின் தாக்கத்தை அதிகம் உள்வாங்கிக்கொள்வருக்கு அது மிகமுக்கிய செய்தி.
இந்தத்தாக்கம் எத்தனை பேருக்கு ஒரு குறித்த விகிதத்திற்கு மேல் இருக்கிறது என்பதை வைத்தே அந்த செய்தியின் பிரபலம் அமைகிறது. ஜப்பானிய பிரதமர் பதவி விலகல் என்பது ஜப்பான் மக்களுக்கு மிகமுக்கிய செய்தி. ஆனால், அந்தந் செய்தி இலங்கையிலுள்ள சாதாரண மக்களுக்கு முக்கியசெய்தியாக இருக்கமுடியாது அவர்கள் ஜப்பான் நிறுவனங்களில் நிதி முதலீடுசெய்திருக்கும் வரையில். இவ்வாறு செய்திகள் ஒவ்வொரு மனிதரிலும் செலுத்தும் தாக்கத்தின் அடிப்படையில் முக்கிய செய்திகளா, இல்லையா என்று வடிவத்தைப் பெறுகின்றன. ஆனால், புதிய தகவல்கள் எல்லாமே செய்திகள்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் புதிய ஊடகச் சூழல் இருந்தே வந்திருக்கிறது. பல நூறு வருடங்களுக்கு முன்னர் வாய் வழி தகவல் பரிமாற்றத்தை மட்டும் நம்பியிருந்தவர்களுக்கு ‘புறா வழி தூது’ என்பது புதிய ஊடகத்தின் (நேற அநனயை) அறிமுகம். அதுபோல, துண்டுப்பிரசுரங்களில் தகவல்களை பரிமாறியவர்களுக்கு பத்திரிகையின் அறிமுகம் புதிய ஊடகமே. அதுபோல, வேகமான இலத்திரணியல் ஊடக காலத்தில் அதனைத் தாண்டிய குறுந்தகவல் சேவைகள், வலைப்பூக்கள், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டவற்றின் அறிமுகம் புதிய ஊடகத்தின் தொடர்ச்சியே.

புதிய ஊடகம் மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் செலுத்தும் தாக்கள் அதிகமானது. தொழிநுட்ப வளர்ச்சியின் அதிகமான பாகங்களை பயன்படுத்துபவர்களாக இளைஞர்களே அதிகம் இருக்கிறார்கள். அதன், துரிதமும் அவர்களிடமே அதிகம் இருக்கிறது. தற்காலத்தில் வாசிப்போ அல்லது நிதானித்த கேட்டல்களே குறைந்து விட்டன. ஒரு தகவலின் ஆழம் எவ்வாறு இருந்தாலும் அதனை நேர்த்தியாக சுருக்கமாக அறிந்துகொள்ளவே இப்போதுள்ளவர்களின் அனேகர் விரும்புகின்றனர். அதற்கு, நேரம் போதாமையும் முக்கிய காரணம். எனவே, இவ்வாறானதொரு காலகட்டத்தில் இந்த புதிய ஊடகச் சூழல் எம்மிடையே செலுத்தும் தாக்கம் முக்கியமானது.

புதிய ஊடகத்தின் போக்கில் யார் வேண்டுமானாலும் தகவலைப் பரிமாற்றுபவராக அல்லது செய்தி சொல்லியாக இருக்க முடியும். சில கணத்துக்குள் பலரிடம் செய்திகளை பரிமாறிவிட முடியும். இலங்கையிலிருக்கிற என்னால் அமெரிக்காவிலிருக்கிற இன்னொருவருடன் புதிய செய்திகளின் தாக்கம் தொடர்பில் கலந்துரையாட முடியும். அத்துடன், குறித்த செய்திகள் தொடர்பில் மற்றவர்களின் கருத்துக்களையும் உடனடியாக அறிந்துகொள்ள முடியும்.

அதுபோல, நம்பகமற்ற செய்திகளையும் இந்தப் பரிமாற்றங்களில் அதிகம் சந்திக்கவேண்டி ஏற்படுகிறது. போலியான நபர்களினால் வதந்திகள் இலகுவாகப் பரப்புவதற்கும் புதிய ஊடகங்களில் வாய்ப்புக்கள் அதிகமே. மட்டறுப்பாளர்கள் அல்லது தகவலை உறுதிப்படுத்திக்கொள்ளாமல் வெளியிடும் சூழலும் இங்கு அதிகம். இதனால், சங்கடங்களும் நேர்ந்துவிடுகின்றன.

துரிதமான சேவையை வழங்கும் புதிய ஊடகம் (நேற அநனயை) நாளையும் பல புதிய தொழிநுட்ப அறிவியல் மாற்றத்துடன் எம்மிடையே வரும். அப்போது, இன்று புதிய ஊடகங்கள் என்று கொண்டாடப்படுபவை பழக்கப்பட்ட வழமையானவையாகிவிடும். புதிய ஊடகம் என்கின்ற சொல் என்றுமே நிலைத்திருக்கும். ஆனால், அந்தச் சொல்லுக்குள் உள்வாங்கப்படுபவை நாளுக்குநாள் மாற்றமாகிக்கொண்டே வரும்.

புதிய ஊடகங்களில் சில…

  • Podcast
  • Facebook
  • Twitter
  • Blogs
  • E- News letter
  • Webinar (இணைய அமர்வுகள்)
  • YouTube
  • SMS reporting
  • E- Chat (இ-சட் எனப்படும் இணைய அரட்டை)




வெற்றி எப்.எம். பணிப்பாளர் ஏ.ஆர்.வி.லோஷன்

புதிய ஊடகங்கள் என்பதற்கு இப்படிப்பதிலளிக்கிறார் “தகவல் பரிமாற்றங்கள் அதிகரித்து அவை மலினப்பட்டுப் போயுள்ள சூழ்நிலை இருக்கின்றது”




இலங்கை ஊடகக்கல்லூரி பயிற்றுவிப்பாளர், தேவகௌரி சுரேந்திரன் - “புதிய ஊடகங்கள் என்பது விரைவான தகவல் பரிமாற்றத்தை செய்கின்றன. அதுவே, ஊடகத்தொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கு சாதகமாகவும், சவாலாகவும் இருக்கின்றது. விரைவான தகவல் பரிமாற்றமென்பது அவசியமானது. ஆனால், அவை நம்பகத்தன்மையுள்ளனவாகவும் இருக்கவேண்டும்”

புதிய ஊடகங்களைப்பற்றி விக்கிப்பீடியா என்ன சொல்கிறது?

“New media is a broad term that emerged in the later part of the 20th century to encompass the amalgamation of traditional media such as film, images, music, spoken and written word, with the interactive power of computer and communications technology, computer-enabled consumer devices and most importantly the Internet. New media holds out a possibility of on-demand access to content any time, anywhere, on any digital device, as well as interactive user feedback, creative participation and community formation around the media content. What distinguishes New media from traditional media is not the digitizing of media content into bits, but the dynamic life of the "new media" content and its interactive relationship with the media consumer. This dynamic life, moves, breathes and flows with pulsing excitement in real time. Another important promise of New Media is the "democratization" of the creation, publishing, distribution and consumption of media content.” http://en.wikipedia.org/wiki/New_media

கடந்தவாரம் எனதுமகன் கணினியில் விளையாடிமுடிந்தவுடன் அமெரிக்க ஜனாதிபதித்தேர்தலுக்கான விவாதத்தை யுடியூபில் பார்த்தேன். நானும் பல விவாதங்களைப்பார்த்திருக்கிறேன் ஆனால் யுடியூபில் பார்ப்பது இதுதான் முதல் தடவை.அது பார்த்து முடிந்தவுடன் ‘என் வாழ்க்கையில் புதிய மீடியா தொழில்நுட்பம் எவ்வளவுதூரம் வளர்ந்துள்ளது’ என்பதை என்னால் வியக்காமல் இருக்கமுடியவில்லை என்று சொல்கிறார் டேவிட் ஷேடன்.பொய்ன்டர் ஒன்லைன் என்கிற மீடியா நிறுவனத்தின் ஊழியர் இவர்;.


to be continued...

இந்தக் கட்டரையானது யாழ்தேவி தனியார் நிறுவனத்தின் 'புதிய மீடியா" என்ற பதத்தின் கீழான ஆய்வின் வெளியீடாகும்.அனுமதியின்றி இதனை பத்;திரிகை மற்றும் இணைய ஊடகங்களில் வெளியிடுதல் முற்றிலுமாகத்தடுக்கப்பட்டுள்ளது.கல்விநோக்கத்திற்காக இதன் பகுதிகள் நகல்செய்யப்படுவது முன்கூட்டீயே அனுமதிக்கப்பட்டுள்ளது.